ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக RM5,000 கேட்ட அமலாக்க அதிகாரி கைது

சண்டகான், ஜூன் 16: மலேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக 5,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட வழக்கின் விசாரணைக்கு உதவ அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சண்டகன் கிளை கைது செய்துள்ளது.

ஆதாரங்களின்படி, 42 வயதான சந்தேக நபர் இன்று காலை 9.30 மணியளவில் சண்டகன் எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் அடையாள அட்டை வழங்குவதை நிர்வகிப்பதற்காக தனிநபர் ஒருவரிடமிருந்து கூலியாக லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில், சபா எம்ஏசிசி இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16 (ஏ) (பி) மற்றும் பிரிவு 17 (ஏ) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபர் எம்ஏசிசி பிணையில் விடுவிக்கப் பட்டதாகவும், இந்த மாத இறுதியில் சண்டகன் சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்றும் கருணாநிதி கூறினார்.


Pengarang :