ALAM SEKITAR & CUACAECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை இன்று புக்கிட் நாகாவில் நடைபெறுகிறது

ஷா ஆலம், ஜூன் 18- சிலாங்கூர் அரசின் ஏசான் மலிவு விற்பனை பயணத் தொடர் இன்று இங்குள்ள கம்போங் புக்கிட் நாகா, அல்-பக்ரி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விற்பனை திட்டத்தில் சந்தையைக் காட்டிலும் குறைந்த விலையில் புதிய உணவு மூலப் பொருள்கள் விற்கப்படும். 

இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த மலிவு விற்பனையில் கோழி, மீன், முட்டை, காய்கறிகள், இறைச்சி, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை பொது மக்கள் வாங்கலாம் என்று சிலாங்கூர் மாநில  விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

இந்த மலிவு விற்பனைச் சந்தையில் துண்டுகளாக்கப்பட்ட கோழி 800 கிம் 10.00 வெள்ளி விலையிலும் இரண்டு கிலோ  கோழி 25.00 வெள்ளி விலையிலும் விற்கப்படும். இது தவிர ஒரு தட்டு முட்டை 12.00 வெள்ளிக்கும் கெம்போங், செலாயாங் வகை மீன்கள் கிலோ 8.00 வெள்ளி விலையிலும் பெறலாம்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி மாநிலத்தின் 50 இடங்களில் நடத்தப்பட்ட ஏசான் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி சுமார் 60,000 பேர் வரை பயனடைந்ததாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 19ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :