ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அடை மழையின் எதிரொலி- கிள்ளான், கோல லங்காட்டில் திடீர் வெள்ளம்

ஷா ஆலம், ஜூன் 24– இன்று அதிகாலை தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த அடை மழையின் காரணமாக கிள்ளான் மற்றும் கோல லங்காட் மாவட்டங்களின் இரு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

கோலக் கிள்ளான், தெலுக் கோங் ஜாலான் பெங்காலான் கம்போங் நெலாயான் மற்றும் தெலுக் பங்ளிமா காராங், ஜாலான் பெராப்பாட் ஆகியவையே  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு பகுதிகளாகும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

இவ்விரு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் இன்று காலை 6.00 மணி மற்றும் 7.00 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 69 பேரை அங்கிருந்து மீட்டதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் மேலும் சிலர் உறவினர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்றார் அவர்.

ஆறு மற்றும் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்த காரணத்தால் அவ்விரு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டதாக கூறிய அவர், வெள்ளம் வடியத் தொடங்கியதைத் தொடர்ந்து நிலைமை சீரடைந்து வருகிறது என்றார்.


Pengarang :