ANTARABANGSAECONOMY

முதியோர் பிரதேசமாக விரைந்து மாறும் ஆசிய-பசிபிக் பிராந்தியம்

போங்காக், ஜூலை 2- உலகின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் ஆசிய-பசிபிக் முதியோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வரும் பிராந்தியமாக மாறி வருகிறது.

உலகிலுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் இந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளதாக ஐ.நா.வின் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான தேசிய பொருளாதார மற்றும் சமூகவியல் ஆணையம் கூறியது.

வரும் 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 130 கோடி பேராக உயரும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்தது.

வயது முதிர்ந்தவர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். 80 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளனர் என்று ஐ.நா.வின் துணைச் செயலாளரும் அந்த ஆணையத்தின் நிர்வாகச் செயலாளருமான அர்மிடா சல்ஷியா அலிஸ்ஜபனா கூறினார்.

அரசியல் ஏற்றத் தாழ்வு, கோவிட்-19 பெருந்தொற்று, பருவநிலை மாற்றம் மற்றும் இலக்கவியல் மாற்றம் போன்ற சிக்கல்களினால் இந்த பிராந்தியத்திலுள்ள வயதானவர்கள் சமத்துவமின்மை போன்ற தாக்கங்களை எதிர்கொள்கின்றனர் என்று அவர் சொன்னார்.

இப்பிராந்தியத்தின் பல பகுதிகளில் முதியோர் எண்ணிக்கை  வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களை பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்கித் தரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :