ECONOMYNATIONAL

கோவிட்-19 சிகிச்சைக்கான வெக்லுரி மருந்துக்கு சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் அனுமதி

கோலாலம்பூர், ஜூலை 8– கோவிட்-19 நோய்த் தொற்றின் அவசர கால சிகிச்சைக்கு வெக்லுரி (ரெம்டெசிவர்) மருந்தை பயன்படுத்த சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

நேற்று கூடிய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் 374வது கூட்டத்தில் இந்த சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எனினும், இந்த மருந்தை நடப்பிலுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துகளுக்கு மாற்றாகவோ பொது சுகாதார விவகாரங்களுக்கு குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றுவதற்கோ பயன்படுத்தும் நோக்கம் கிடையாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிபந்தனையுடன் கூடிய பதிவுக்கு தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் தரப்பட வேண்டும் என்பதோடு அந்த மருந்தின் ஆக்கத் தன்மை மீது தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவு தொடர்ந்தார்போல் சோதனை நடத்தி வரும் என்று அவர் சொன்னார்.

இந்த தயாரிப்பின் நன்மைகள் இடர் ஒப்பீட்டைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்துகளை மக்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து கடப்பாடாக கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :