ECONOMYNATIONAL

இரகசிய கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 8 – கடந்த இரண்டு நாட்களாக நகரில் “Op Katia” இன் கீழ் நடத்தப்பட்ட சோதனையில், இரகசிய கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜாலான் புக்கிட் செகாம்புட்டில் உள்ள காண்டோமினியத்தின் வாகன நிறுத்துமிடத்தில் முதல் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

முதல் சந்தேக நபரின் கைத்தின் வழி இங்குள்ள டுத்தாமாஸில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு காவல்துறை  சென்றது, அங்கு மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு சந்தேக நபர்கள் அம்பாங்கில் உள்ள ஒரு காண்டோமினியம் பிரிவில் கைது செய்யப்பட்டனர், அங்கு போலீசார் ஒன்பது தோட்டாக்களுடன் ஒரு ரிவால்வரையும் கைப்பற்றினர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 152.16 கிலோ கஞ்சா, 15.12 கிலோ சயாபு, 785 கிராம் ஹெராயின் மற்றும் 3000 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 500 ரிங்கிட் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியதாக அஸ்மி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து சிண்டிகேட் போதைப் பொருளைப் பெற்றுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

26 மற்றும் 31 வயதுடைய நான்கு சந்தேக நபர்களில் இருவர் போதைப்பொருளுக்கு சாதகமாக சோதனை செய்ததாகவும் மற்றும் அவர்களில் மூன்று பேர் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் சம்பந்தப்பட்ட முந்தைய பதிவுகளைக் கொண்டுள்ளதாகவும் அஸ்மி கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B மற்றும் துப்பாக்கிச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ் விசாரணைக்காக அவர்கள் ஜூலை 12 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :