ECONOMYHEALTHNATIONAL

விரைவாகப் பரவும் உருமாறிய ஒமிக்ரோன் திரிவு- நான்கே நாட்களில் கோவிட்-19 சம்பவங்கள் 31% அதிகரிப்பு

ஷா ஆலம், ஜூலை 8– ஒமிக்ரோன் பிஏ5 வகை உருமாறிய திரிபு பரவல் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவிட்-19 நோய்த் தொற்றின் நான்காவது அலையை நாடு எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 31 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஆகவே, பூஸ்டர் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள்  விரைந்து அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்  கொண்டார்.

நாட்டில்  நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டி 4,020 ஆகப் பதிவானது.

ஆகக் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அதிகப்பட்சமாக 4,006 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

நேற்று 3,561 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்த வேளையில் நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,932 ஆக இருந்தது.


Pengarang :