ECONOMYSAINS & INOVASISELANGORSMART SELANGOR

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒளியீர்ப்புத் தகடுகள், எல்.இ.டி. விளக்குகளை  பொருத்த திட்டம்

ஷா ஆலம், ஜூலை 8- மின்தூக்கி (லிஃப்ட்) வசதி கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளில் சூரிய ஒளியீர்ப்புத் தகடுகள் மற்றும் எல்.இ.டி.விளக்குகளைப் பொருத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்கும் பசுமைத் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் 40 கோடி வெள்ளி வரையிலான முதலீட்டை ஈர்த்துள்ளது. அதில் ஒரு நிறுவனம் 12 கோடி வெள்ளி வரை முதலீடு செய்யத் தயாராக உள்ளது என அவர் சொன்னார்.

அனைத்து வீடமைப்புத் திட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்துவதை உறுதி செய்வதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும். இதன் மூலம் வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் கார்பன் இல்லா மாநிலமாக சிலாங்கூரை உருவாக்க முடியும். இந்த கொள்கையை நாங்கள் இப்போது முறைப்படுத்தி வருகிறோம்.அனைத்து மேம்பாட்டாளர்களும் இதனைப் பின்பற்றுவதை உறுதி செய்வோம் என்றார் அவர்.

முதலாவது சிலாங்கூர் திட்ட தொடக்கத்திற்கு முந்தைய ஆய்வரங்கில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு சொன்னார்.

சந்தையில் தேவைக்கும் அதிகமாக வீடுகள் இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக வீடமைப்புத் திட்டங்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

அக்காலக்கட்டத்தில் தேவைற்றதை ஒதுக்கி தேவையானதை மட்டும் செய்வது குறித்து யோசிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :