ECONOMYMEDIA STATEMENT

பட்ஜெட் ஹோட்டலில் இரு வாரத்தில் நான்கு முறை தீ- அலோர்ஸ்டாரில் சம்பவம்

ஷா ஆலம், ஜூலை 12– அலோர்ஸ்டார் நகரின் மத்தியில் அமைந்துள்ள பட்ஜெட் ஹோட்டல் எனப்படும் சிக்கன தங்கும் விடுதி ஒன்றில் இரு வார காலத்தில் நான்கு முறை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஆகக் கடைசியாக இன்று காலை இந்த இரண்டு மாடி தங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

இச்சம்பவத்தில் மேல் மாடியிலுள்ள அறை ஒன்று சேதமடைந்ததாக தீயணைப்புத் துறையின்  நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் முகமடுல் ஏசான் முகமது ஜைன் கூறினார்.

தீவிபத்து ஏற்பட்ட போது அந்த ஹோட்டலில் யாரும் தங்கியிருக்கவில்லை எனக் கூறிய அவர், பத்தே நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சொன்னார்.

எட்டு அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் மேல் தளம் மரப்பலகை  மற்றும் சட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது என்றார் அவர்.


Pengarang :