ECONOMYNATIONALSUKANKINI

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா- வியட்னாம் மோதல்

கோலாலம்பூர், ஜூலை 12 – இந்தோனேசியாவின் பெக்காசியில் நேற்று நடைபெற்ற ஆசியான் கால்பந்து சம்மேளனத்தின் (ஏ.எப்.எப்.) 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மலேசிய அணி லவோசிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

பெட்ரியோட் சண்ட்ராபாகா அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ரிசர்வ் ஆட்டக்காரராக களம் இறங்கிய லவோசின் புட்டாவோங் சங்விலாய் ஆட்டத்தின் 68 வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் புகுத்தி அந்நாட்டை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.

இதன் வழி இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து நான்கு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவாத குழு என்ற பெருமையை லவோஸ் தக்கவைத்துக் கொண்டது.

அப்போட்டியின் பி பிரிவில் பன்னிரண்டு புள்ளிகளை மொத்தமாகப் பெற்றதன் வழி லாவோஸ் அரையிறுத் ஆட்டத்திற்கான தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

அரையிறுதிப் போட்டியின் போது தமது குழு தோல்வியிலிருந்து மீண்டெழும் என தாம் நம்புவதாக மலேசிய அணியின் பயிற்றுநர் ஹசான் ச சாலி கூறினார். வெற்றி பெறுவதற்கு நாம் கடுமையாகப் போராடுவோம். கோல் அடிக்கும் வாய்ப்புகளை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் நமது பலவீனம் என்பதை உணர்ந்துள்ளோம் என்றார் அவர்.

ஆட்டத்தின் இறுதி 20 நிமிடங்களை நாம் முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆயினும், கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றார் அவர்.


Pengarang :