ECONOMYMEDIA STATEMENT

நான்கு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான டிரெய்லர் லோரி ஓட்டுநர் மூன்று நாட்கள் விசாரணைக்கு தடுப்பு

ஷா ஆலம், ஜூலை 14: வடக்கு- தெற்கு விரைவுச் சாலையின் கிலோமீட்டர் 277.1 இல் நான்கு குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான டிரெய்லர் லோரி  ஓட்டுநர் சனிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விசாரணைக்கு உதவுமாறு காவல்துறையினரிடம் விண்ணப்பத்தைப் பெற்ற பின்னர், உதவிப் பதிவாளர் புத்திரி நோர்டினா கமலாவுடின் இந்த உத்தரவு பிறப்பித்ததாக அஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் ஒரு வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக 34 வயதான நபர் தடுத்து வைக்கப்பட்டார்.

பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், அந்த நபரிடம் 2008 முதல் 2021 வரை போக்குவரத்து சம்மன்கள் தொடர்பான 13 பதிவுகள் இருப்பதாகவும் அவற்றில் மூன்று சாலை விபத்துகள் தொடர்பானவை என்றும் கூறினார்.


Pengarang :