ECONOMYMEDIA STATEMENT

படகு விபத்தில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

பந்திங், ஜூலை 19-  ஜெஞ்சாரோம், கம்போங் சுங்கை ரம்பை எல்.கே.சி. படகுத் துறை அருகே நேற்று முன்தினம் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன மீனவர் சம்பவ இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டார்.

முப்பது வயதான முகமது அஸ்ரி அமீர் ஹசான் என்ற அந்த ஆடவரின் உடல்  பிற்பகல் 1.25 மணியளவில் கம்போங் சாவா, பந்திங் பாலத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவரைத் தேடி மற்றும் மீட்கும் பணிகள் நேற்று முன்தினம்  மதியம் தொடங்கி நேற்றும்  தொடர்ந்தது. சுங்கை மங்கிஸ் மற்றும் கேரி தீவை நோக்கி ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு தேடுதல் பணி மையமிட்டிருந்தது என்று அவர் சொன்னார்.

அந்த மீனவரின்  உடல் பிரேத பரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக  பெர்னாமாவிடம் அவர் கூறினார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது இரு நண்பர்களான ஏடி அப்துல் ரஹ்மான் (வயது 56), மற்றும் முகமது பிர்டாவுஸ் முகமது (வயது 40),ஆகியோர் பயணித்த படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் எடி மற்றும் பிர்டாவுஸ் தங்களைக்  காப்பாற்றிக் கொண்ட வேளையில் அஸ்ரி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.


Pengarang :