ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முதல் சிலாங்கூர் திட்டத்தில் ஒன்பது திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஜூலை 27- மாநிலத்தில் பல்லுயிர் மற்றும் இயற்கை வளங்களின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கு முதல் சிலாங்கூர் திட்டத்தில் ஒன்பது செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

மூன்று வியூகங்களை உள்ளடக்கிய அந்த திட்டங்கள் மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பசுமை மேம்பாடு மற்றும் இயற்கை வளங்களுக்கு புத்துயிரூட்டும் முயற்சிகள் சமூகவியல் நல்வாழ்வை மேம்படுத்த உதவும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் குறைந்த கார்பன் அளவு கொண்ட மாநிலமாக உருவாவதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று முதல் சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த போது தெரிவித்தார்.


Pengarang :