ALAM SEKITAR & CUACAECONOMY

பாலிங் வெள்ளம்- 41 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

அலோர்ஸ்டார், ஆக 3- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி பாலிங் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பாலிங் மாவட்டத்திலுள்ள ஐந்து  கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய பொது தற்காப்பு படைப் பிரிவு செயலகத்தின் தலைவர் மேஜர் முகமது முவாஸ் முகமது யூசுப் கூறினார்.

கம்போங் ரம்போங் பத்து, கம்போங் பெண்டாங் செரா, கம்போங் ஜெர்னாங், கம்போங் செராத்துஸ், கம்போங் தஞ்சோங் லங்சாட் ஆகியவையே பாதிக்கப்பட்ட அந்த நான்கு கிராமங்களாகும் என அவர் சொன்னார்.

எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் துங்கு ஹஸ்பா தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் டேவான் துன் அப்துல் ரசாக்கில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :