ECONOMYMEDIA STATEMENT

ஜலினா வீட்டில் மூன்று முறை சோதனை-  புதிய தடயங்கள்  கிடைக்கவில்லை

ஷா ஆலம், ஆக 4 – முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ஜலினா ஷஹாரா அஸ்மான் காணாமல் போன  சம்பவம் தொடர்பான புதிய தடயங்கள் எதனையும் போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

ஜலினாவின் வீட்டில் இதுவரை மூன்று முறை சோதனை நடத்தியுள்ள நிலையில்   புதிய தடயங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

ஆகக்கடைசியாக கடந்த ஜூலை 28  ஆம் தேதி  காணாமல் போனவரின் வீட்டில் சோதனை  மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையில் புதிதாக தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர்  ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இச்சோதனையில் சிலாங்கூர் மாநில போலீஸ்  தலைமையகத்தின் மோப்ப நாய் பிரிவு (கே9) மற்றும் தடயவியல் பிரிவு (டி10) ஆகியவை பயன்படுத்தப்பட்டன என்றார் அவர்.

ஜலினா அஸ்மான் என்று பிரபலமாக அறியப்படும் 58 வயதான ஜலினா ஷஹாராவின் கைப்பேசி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி, அதாவது அவரது மகன் அவரை அழைக்க முயற்சிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரை செயலில் இருந்தது கண்டறியப்பட்டது.

ஜலினா காணாமல் போனது தொடர்பில் அவரின் மகன் மைக்கல் நோர்மன் (வயது 33) கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி போலீசில் புகார் செய்தார்.


Pengarang :