ECONOMYSELANGOR

பி40 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க கோத்தா அங்கிரிக் தொகுதி வெ.15,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஆக 13- வசதி குறைந்த பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக கோத்தா அங்கிரிக் தொகுதி இவ்வாண்டில் 15,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

தகுதி பெற்ற 10 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் தொகுதி சேவை மையத்தில் நேற்று வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இத்தகைய உதவிகள் பி40 குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களின் சுமையை குறைக்க உதவும் அதேவேளையில் மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கோத்தா அங்கிரிக் தொகுதியிலுள்ள மாணவர்கள் யாரும் கல்வியை பாதியில் விடுவதை தடுப்பதற்காக இத்தகைய உதவித் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மடிக்கணினிகளை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த மடிக்கணினிகளை தேவையற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்த வேண்டாம். பயனுள்ள காரியங்களுக்கு இதனைப் பயன்படுத்துங்கள். இந்த மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.


Pengarang :