ECONOMYHEALTHSELANGOR

சுபாங் ஜெயாவின் குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 28 அன்று இலவச சுகாதார பரிசோதனையில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்

சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 14: ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும் சிலாங்கூர் சாரிங் நிகழ்ச்சியில் பங்கேற்க சுபாங் ஜெயா சட்டமன்றத்தில் வசிப்பவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சுபாங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி, சுபாங் ஜெயா 3K வளாகத்தில் இலவச சுகாதார பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க 1,000 பங்கேற்பாளர்களுக்கு தனது தரப்பு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

“இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறியும் வகையில் இந்த திட்டம் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற வாய்ப்புகள் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்  என்பதால் 1,000 பங்கேற்பாளர்களுக்கு இந்த ஒதுக்கீட்டை  தொகுதி மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.  அந்தப் பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் நேரடியாக திட்டத்திற்கு வரலாம், ஆனால் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்பதால் சிலாங்கா செயலி வழி பதிந்து கொள்ள ஊக்குவிப்பதாக அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார். மேலும், சிறப்புப் பதிவுகள் முதியோர்களுககு  செய்ய சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு செல்வதாக தெரிவித்தார்.

இன்று SS15 சந்தையிலும், பின்னர் USJ4 விளையாட்டு மைதானத்தில் (ஆகஸ்ட் 20), PJS 7 காலை சந்தையிலும் (ஆகஸ்ட் 21) USJ14 விளையாட்டு மைதானத்திலும் (ஆகஸ்ட் 22) திட்டம் செயல்படுத்தப்படும்.

“இளைஞர்கள் சிலாங்கா செயலியின் மூலம் பதிவு செய்யலாம். இருப்பினும், பதிவு செய்வதில் சிக்கல் இருந்தால்,  தனது சேவை மையத்திற்கு வரலாம்,” என்றார்.


Pengarang :