ANTARABANGSAECONOMYSELANGORSUKANKINI

கெந்திங்-சிலாங்கூர் இளைஞர் டென்னிஸ் போட்டியில் 106 வீரர்கள் போட்டி

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: ஆகஸ்ட் 20 முதல் 27 வரை நடைபெறும் 2019 கெந்திங்- சிலாங்கூர் சர்வதேச ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 106 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சிலாங்கூர் டென்னிஸ் சங்கம் (STA) இணைந்து நடத்தும் போட்டிகள் கிளானா ஜெயா எம்பிபிஜே விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகரசபை (எம்பிபிஜே) அறிவித்துள்ளது.

மலேசியாவைத் தவிர, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், கஜகாஸ்தான், இந்தியா, இலங்கை, ஜப்பான், மாலத்தீவு, ஹாங்காங், கொரியா, ஜோர்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

“ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் இரட்டையர் என மொத்தம் நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும்” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

எம்பிபிஜே மேலும் கூறுகையில், 1990 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் இளைஞர் டென்னிஸ் விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் நோக்கம் இளம் மற்றும் அடிமட்டத்தில் உள்ள விளையாட்டாளர்களை அடையாளம் காண்பதாகும். இந்த கூட்டு முயற்சி வெற்றி பெற்றதாக அது கருதுகிறது.

“வெளிநாட்டில் இருந்து பங்கேற்பாளர்களுடன், நம் போட்டியளர்கள் பங்குபெறுவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க  அனுபவத்தை சேர்ப்பதுடன், உள்ளூர் பங்கேற்பாளர்களின் திறமை மற்றும் விளையாட்டு தரத்தை மேலும் மேம்படுத்தும்,” என்று போட்டியின் முக்கிய அனுசரணையாளரான கெந்திங் மலேசியா பெர்ஹாட் கூறியது.


Pengarang :