ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பெண் இடர்பாடுகள் குறித்து விவாதிக்க பெண்களை மாநாட்டிற்கு அழைக்கிறார்  ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 18: சிலாங்கூர் பெண்கள் மாநாடு (PWS) 2022, இங்குள்ள எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

பெண்கள் மற்றும் குடும்ப ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், https://tinyurl.com/JemputPWS22 என்ற இணைப்பின் மூலம் இலவசமாக பதிவு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கிறார்.

” சிலாங்கூர் பெண்கள் மாநாட்டின் கருப்பொருள் ‘ஒரு நியாயமான, வளமான மற்றும் சமமான சிலாங்கூர் நோக்கி’ என்பது, அனைவருக்குமான விவாதம் மற்றும் கருத்துகளைப் பகிர்வதற்கான ஒரு தளமாகும்.

“பொருளாதாரத் துறை, சுகாதாரம், கல்வி, கலை கலாச்சாரம் மற்றும் பல உட்பட பல்வேறு சுவாரஸ்யமான தலைப்புகள் உள்ளடக்கப்படும்,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

வனிதா பெர்டாயா சிலாங்கூர் ஏற்பாடு செய்த சிலாங்கூர் பெண்கள் மாநாடு 2022, சிலாங்கூர் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.


Pengarang :