ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2023 பட்ஜெட்- பொதுமக்கள் கருத்துகளை முன்வைக்க மந்திரி புசார் கோரிக்கை

ஷா ஆலம், ஆக 19 – வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆக்ககரமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குமாறு சிலாங்கூர் மாநில மக்களை மக்களை மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.amirudinshari.com/selangor2023 வாயிலாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்று அவர் கூறினார் . மாநிலத்தின் வளர்ச்சிக்கான இலக்கையும்  வரவு செலவுத் திட்டத்தையும்  தயாரிப்பதில் சிலாங்கூர் அரசாங்கம் எப்போதுமே மக்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை கருத்தில் கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

டவுன் ஹால் அமர்வு என்பது மக்கள் பேசுவதற்கான ஒரு இடமாக எப்போதும் செய்யப்படும் ஒரு வழக்கமான நடைமுறையாகும் என்று அவர் நேற்று கூறினார். ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய இயங்கலை வாயிலாக  பட்ஜெட் கருத்து கேட்கும் நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :