ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரஷியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய மியான்மார் திட்டம்

ஆகஸ்ட் 19 - விநியோகப் பிரச்னை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் ராணுவத்தால் ஆளப்படும் மியான்மார் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து பெட்ரோல் மற்றும் எரிபொருள்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

 உலக எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில்  வளரும் நாடான மியன்மார் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜுண்டா அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கடந்தாண்டு கவிழ்த்த  இராணுவ புரட்சிக்காக மியான்மர் மற்றும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்காக ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்கி வருகின்றன.

இருந்தபோதிலும் அந்த தென்கிழக்கு ஆசிய நாடான இது, ரஷ்யாவுடன் சிறப்பான நட்புறவைப் பேணி வருகிறது.

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக இந்த ஆண்டில்  தனது மிகப்பெரிய ஏற்றுமதி இடமான ஐரோப்பாவின் தடைகளை எதிர் நோக்கும் காரணத்தால் இப்பகுதியில் ரஷியா புதிய வாடிக்கையாளர்களைத் தேடி வருகிறது.

ரஷ்யாவிலிருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோம் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் ஸாவ் மின் துன் கடந்த புதன் கிழமை ஒரு செய்தி மாநாட்டின் போது கூறினார்.

எரிபொருளின் தரமும் விலையும் தங்களுக்கு சாதகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் மேற்கொண்ட ரஷ்ய பயணத்தின் போது ஜுண்டா தலைவர் மின் ஆங் லைங் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றி கொள்முதல் பற்றி  விவாதித்தார் என்று ஜா மின் துன் கூறினார். 

மியான்மர் இப்போது சிங்கப்பூர் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்கிறது.

Pengarang :