ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

50 உணவு விநியோகிப்பாளர்களுக்கு பெட்ரோலுக்கான இலவச பற்றுச் சீட்டு- கணபதிராவ் வழங்கினார்

ஷா ஆலம், ஆக 21- இ-ஹெய்லிங் எனப்படும் உணவு விநியோகிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 50 பேருக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் பெட்ரோலுக்கான இலவச பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.

மோட்டார் சைக்கள்கள் மூலம் உணவு விநியோகம் செய்து வருவோரின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த நிகழ்வு தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.

இந்த திட்டம் இவ்வாண்டில் மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பங்கேற்ற அனைவரின் மோட்டார் சைக்கிள்களுக்கும் முழு கொள்ளலளவு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.

இந்த உணவு விநியோகிப்பாளர்களின் பணி சுலபமானது போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்கள் கடுமையான வாழ்க்கைச் செலவின நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழிலில் திருமணமாகாத இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத் தலைவர்களும் தனித்து வாழும் தயார்மார்களும்கூட ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகளின் மூலம் அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பும் கிட்டுகிறது என்றார் அவர்.

உணவு விநியோகிப்பாளர்களுக்கு மாநில அரசின் ஏற்பாட்டில் 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் 20 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள், கனிம நீர், ரொட்டி ஆகியவற்றை வாங்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :