ANTARABANGSAECONOMYPENDIDIKAN

மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புகிறார்கள்: சீனா, மலேசியா முயற்சிகள் பாராட்டப்பட்டது

பெய்ஜிங், ஆகஸ்ட் 24 – மலேசிய மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவது குறித்த சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள மலேசியத் தூதரகம் சீன மற்றும் மலேசிய அரசாங்கங்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

மலேசிய மாணவர்களின் அவலநிலையை நிவர்த்தி செய்வதற்கும், திறமையாகவும் ஒழுங்கான முறையிலும் அவர்கள் சீக்கிரமாகத் திரும்புவதற்கும் இரு நாடுகளும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சீனாவுக்கான மலேசியத் தூதர் ராஜா டத்தோ நுஷிர்வான் ஜைனால் அபிடின் கூறினார்.

“இந்த விஷயத்தில் சீனாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்,” என்று அவர்  பெர்னாமாவிடம் கூறினார்.

சமீபத்தில், படிப்பதற்கான சீன குடியிருப்பு அனுமதிகளை வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக மலேசியாவில் உள்ள சீன தூதரகம் கூறியது.

சீனாவில் நீண்டகால கல்வி பெறும் மலேசிய மாணவர்களிடமிருந்து விசா விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதாக சனிக்கிழமையன்று தூதரகம் ஒரு பேஸ்புக் பதிவில் கூறியது.

ஊடக அறிக்கையின்படி, சுமார் 8,000 மலேசிய மாணவர்கள் கோவிட்-19 ஊரடங்கு காரணமாக தங்கள் படிப்பை மீண்டும் தொடங்க சீனாவுக்கு திரும்ப முடியவில்லை.


Pengarang :