ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாயா ஜெராஸ், தஞ்சோங் சிப்பாட் தொகுதிகளில் இன்றும் நாளையும் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஆக 27- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான மலிவு விற்பனை இன்றும் நாளையும் இரு இடங்களில் நடைபெறவுள்ளன.

இந்த மக்கள் பரிவு விற்பனை பாயா ஜெராஸ், கம்போங் குபு காஜாவில் இன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று அக்கழகம் கூறியது.

தஞ்சோங் சிப்பாட் தொகுதி நிலையிலான மலிவு விற்பனை மெர்டேக்கா மெகா விற்பனை என்ற பெயரில் நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பத்து லாவுட் பந்தாய் மெர்டேக்காவில் நடைபெறும் என்று அது தெரிவித்தது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 15 வெள்ளி விலையிலும் ஒரு தட்டு முட்டை 12.50 வெள்ளி விலையிலும் சமையல் எண்ணெய் பாக்கெட் வெ. 2.50 விலையிலும் மீன் ஒரு பக்கெட் 10 வெள்ளி விலையிலும் விற்கப்படும். இது தவிர, தோட்டத்திலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளையும் குறைந்த விலையில் இங்கு வாங்கலாம்.

பொருள் விலையேற்றம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பொது மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் மலிவு விற்பனைத் திட்டத்தை தொடக்கியது. இத்திட்டத்தின் வழி இது வரை மாநிலத்திலுள்ள சுமார் 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :