ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இரண்டாம் காலாண்டில் கும்புலான் பெராங்சாங்  நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு

கோலாலம்பூர், ஆக 27- சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலான் பெராங்சாங் பெர்ஹாட்டின் (கே.பி.எஸ்.) நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் அதிகரிப்பைக் கண்டுள்ளது.

இவ்வாண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த அந்நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 26 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியாக இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் அந்நிறுவனத்தின் லாபம் 16 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியாகப் பதிவானது.

கடந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் 32 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியாக இருந்த அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் 32 கோடியே 55 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியாக உயர்ந்துள்ளது.

அக்குவா-ஃப்ளோ சென். பெர்ஹாட், சி.பி.ஐ.(பினாங்கு) சென். பெர்ஹாட் மற்றும் கிங் கோய்ல் லைசென்சிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களின்  லாபம் இந்த வருமான அதிகரிப்புக்கு காரணமாக இருந்தது.

கும்புலான் பெராங்சாங் நிறுவனம் முதலாம் காலாண்டிலும் கூடுதல் நிகர லாபத்தை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 முதலாம் காலாண்டில் 1 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியாக இருந்த வருமானம் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் 1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியாக பதிவானது.

 


Pengarang :