ALAM SEKITAR & CUACAANTARABANGSAECONOMY

மேற்கு சுமத்ராவை வலுவான நிலநிடுக்கம் உலுக்கியது

ஜாகர்த்தா, ஆக 29 – இந்தோனேசியாவின் மேற்கு மாநிலமான மேற்கு சுமத்ராவில் திங்கள்கிழமை ரிக்டர் அளவில் 6.4 எனப்பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜாகர்த்தா நேரப்படி 10.29 மணிக்குத் ஏற்பட்டதாக ஷின் ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

இந்த நிலநடுக்கம் கெபுலாவான் மெண்டவாய் (மென்டவாய் தீவுகள்) மாவட்டத்தின் வடமேற்கே 116 கிமீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த பூகம்பத்தினால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :