ECONOMYMEDIA STATEMENT

இனத்துவேஷ அறிக்கை- விசாரணைக்காக ஹாடி அவாங் புக்கிட் அமான் அழைக்கப்பட்டார்

கோலாலம்பூர், ஆக 30- முஸ்லீம் அல்லாதோரும் பூமிபுத்ரா அல்லாதவரும் மிக அதிகமாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறியது தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் நேற்று புக்கிட் அமான் வந்ததை அரச மலேசிய போலீஸ் படை உறுதிப்படுத்தியது.

தனது வழக்கறிஞருடன் அப்துல் ஹாடி அவாங் புக்கிட் அமான் வந்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் தொடர்புப் பிரிவுத் தலைவர் ஏசிபி ஏ.ஸ்கந்தகுரு கூறினார். எனினும், இதன் தொடர்பில் விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை.

இந்த விசாரணையை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்பு குற்றப் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. இந்த வாக்குமூலப் பதிவின் போது ஹாடி அவாங் முழு ஒத்துழைப்பை வழங்கினார் என நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

முஸ்லீம் அல்லாதோரும் பூமிபுத்ரா அல்லாதோரும் மிக அதிகமாக ஊழலில் ஈடுபடுவதாக கூறியது தொடர்பில் ஹாடி அவாங்கிற்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூறியிருந்தது.

இந்த அறிக்கை தொடர்பில் ஹாடி அவாங்கிற்கு எதிராக 28 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்ததாக ஸ்கந்தகுரு முன்னதாக கூறியிருந்தார்.

மக்களிடையே இன உணர்வை  து ண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் 505(சி) பிரிவு மற்றும் தொடர்பு சாதனங்கள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தியதற்காக தகவல் மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :