ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எல்.சி.எஸ். போர்க்கப்பல் விவகாகரம்- ரபிஸியிடம் வாக்குமூலம் பதிவு-கைப்பேசி பறிமுதல்

கோலாலம்பூர், செப் 4- பிரதமர் துறையின் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ அப்துல் லத்திப் அகமதுவின் உதவியாளரிடமிருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி  கிடைத்த புகாரின் அடிப்படையில் பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் நேற்று உறுதிப்படுத்தினர்.

சைட் அகமது முஸ்ஸூடின் அல்-சைட் முகமது என்ற அந்த உதவியாளரிடமிருந்து கிடைத்த பேரில் ரபிஸிக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி போ எங் லாய் கூறினார்.

தொடர்பு வசதிகளை அல்லது சேவையை தவறாகப் பயன்படுத்தியதற்காக 1998 ஆம் ஆண்டு தகவல்,பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவு மற்றும் அவதூறு பரப்பியதற்காக தண்டனைச் சட்டத்தின் 500வது பிரிவு ஆகியவற்றின் கீழ் ரபிஸிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

தனது வழக்கறிஞர் அடி ஜூல்கர்னாய்னுடன் நேற்று மாலை 3.00 மணியளவில் செந்துல் போலீஸ் நிலையம் வந்த ரபிஸி மாலை 4.44 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

எல்.சி.எஸ். எனப்படும் கடலோர போர்க் கப்பல் கொள்முதல் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஜைனாப் முகமது சாலே என்றப் பெண் அப்துல் லத்திப்பின் மனைவி என்ற குற்றச்சாட்டு உள்பட பல்வேறு அவதூறுகளை பரப்பியதாக கூறி அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.


Pengarang :