ECONOMYMEDIA STATEMENT

பேருந்தில் தீ 44 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் காயமின்றி தப்பினர்

கிரிக், செப்டம்பர் 11 – இன்று, இங்குள்ள தாசிக் பாண்டிங் அருகே ஜாலான் கிரிக் 39.5 கிலோமீட்டரில் அவர்கள் பயணம் செய்த சுற்றுலா பேருந்து தீப்பிடித்ததில் 44 மாணவர்களும் ஒரு பேருந்து ஓட்டுநரும் காயமின்றி தப்பினர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிற்பகல் 2.05 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

“குழு வந்த போது, தீ அதன் உச்சத்தில் இருந்தது, அது சுற்றுலாப் பேருந்தின் 80 விழுக்காட்டை அழித்துவிட்டது.

“இருப்பினும், தீ பரவுவதற்கு முன்பு பேருந்தில் இருந்து வெளியேற முடிந்ததால், பேருந்து ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினர்,” என்று பிற்பகல் 3.48 மணிக்கு நடவடிக்கை முடிந்த பிறகு அவர் கூறினார்.

மாணவர்களை மீண்டும் வளாகத்திற்கு அனுப்புவதற்கு கெடாவில் உள்ள சாங்லுன் மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு கிளந்தானில் இருந்து பேருந்து சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.


Pengarang :