ECONOMYPBTSELANGOR

கோத்தா டாமன்சாரா மக்கள் மலிவு விற்பனைக்கான கூப்பன்களைப் பெற்றனர்

பெட்டாலிங் ஜெயா, செப் 20– ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் கலந்து கொள்ளும் கோத்தா டாமன்சாரா மக்களுக்கு கட்டணக் கழிவு கூப்பன்களை வழங்குவதற்காக தொகுதி சட்டமன்றம் சார்பில் 5,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனைத் திட்டத்தின் கீழ் கோழி, அரிசி,மீன், முட்டை ஆகிய அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் தொகுதியைச் சேர்ந்த 1,500 பேருக்கு தலா 3.00 வெள்ளி மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாதிரி மன்சோர் கூறினார்.

கடந்த வாரம் தொடங்கி தொகுதியிலுள்ள ஆறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த மலிவு விற்பனையின் வழி 1,500 பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கோழி மற்றும் முட்டைக்கு வரவேற்பு அதிகம் உள்ள காரணத்தால் அவ்விரு பொருள்களின் விற்பனையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பொருள்களை வாங்குவோரில் பலர் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் என்பதால் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனை சுங்கை ஆயர் தாவார் சமூக  சேவை மைய வளாகம், சுங்கை பூரோங் தாமான் அரோவானா பெர்டானா, பெக்கான் பாசீர் பாஞ்சாங், கோல சிலாங்கூர், கம்போங் ஸ்ரீ திராம் ஜெயா சமூக மண்டபம் ஆகிய இடங்களிலும் ஏக காலத்தில் நடைபெறுகிறது.

மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :