ECONOMYSELANGORSUKANKINI

சிலாங்கூர் அடுத்த ஆண்டு தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இ-ஸ்போர்ட்ஸ் மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 21: தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இ-ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டு மையத்தை இந்த மாநிலத்தில் கட்டுவதற்கான திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்பட வேண்டும், ஆனால் தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை என்று இளைஞர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“இந்த மையம் விளையாட்டிற்கு மட்டுமின்றி அது மேலும் பல வசதிகளை கொண்டிருக்கும், அவை தங்குமிடம் மற்றும் பயிற்சி பட்டறை” என்று முகமது கைருடின் ஓத்மான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இ-ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டு மையம், தனியார் மற்றும் மாநில அரசாங்கத்தின் நிதி உள்ளிட்ட RM1 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த மாநிலத்தில் கட்டப்படும்.

பயிற்சி அகாடமி, தங்குமிடம், ஸ்டூடியோக்கள் மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்த மையம், புதுப்பிக்கப்பட்ட செக்சன் 13 இல் உள்ள முன்னாள் கார்ல்டன் ஹோட்டல் கட்டிடத்தை பயன்படுத்தும்.


Pengarang :