ECONOMYNATIONALTOURISM

இந்தோனேசிய கண்காட்சியில் டூரிசம் சிலாங்கூர் பங்கேற்கிறது- சுகாதார மருத்துவத்தை விரிவாக்கத் திட்டம்

ஷா ஆலம், செப் 23- இந்தோனேசியாவின் மேடானில் நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் 2020 மலேசிய சுகாதார பராமரிப்பு கண்காட்சியில் டூரிசம் சிலாங்கூர் மீண்டும் பங்கேற்கிறது.

மலேசிய சுகாதார சுற்றுலா மன்றத்தினால் நடத்தப்படும் இந்த கண்காட்சி சுற்றுலாத் துறையில் மருத்துவத்தை ஒரு புதிய துறையாக உருவாக்குவதில் முனைப்பு காட்டும் என்ற டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல் முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

நவீன மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய 46 மருத்துவமனைகளை சிலாங்கூர் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் சுற்றுப்பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

தமது தலைமையிலான இந்த சுற்றுலா ஊக்குவிப்பு குழுவில் எம்.எஸ்.யு. மருத்துவ மையம், ரேகன் ரெஹான் மருத்துவமனை, டென்டல் ரெப்பாப்ளிக் ஆகிய மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

சென்டர் பாய்ண்ட் பேரங்காடியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் மலேசியாவில் வழங்கப்படும் சுகாதார பராமரிப்பு சேவை  தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறை சார்ந்த மேலும் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்று அவர்  தெரிவித்தார்.


Pengarang :