ECONOMYMEDIA STATEMENT

பத்து பஹாட், பொந்தியானில் இரு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

பத்து பஹாட், செப் 23- பெந்தியான் மற்றும் பத்து பஹாட்டில் இரு வெள்ள துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் ஸ்ரீ காடிங் இடைநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் இன்னும் தங்கியுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் செயல்குழு கூறியது.

தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடீங்,  கம்போங் பாரு தஞ்சோங் மற்றும் பெக்கான் ஸ்ரீ காடீங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வெள்ள அகதிகள் கடந்த 14 ஆம் தேதி முதல் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இதனிடையே, ஜாலான் குர்னியா, கம்போங் மாஜூ ஜெயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொந்தியான், கம்போங் சாவா தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :