ECONOMYMEDIA STATEMENT

புக்கிட் பெருந்தோங்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், செப் 24- இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு இயக்கத்தின் போது 78.38 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக சிலாங்கூரில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பான கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் புக்கிட் பெருந்தோங், கெனாகா தொழில்பேட்டைப் பகுதியில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்த குப்பை அகற்றும் பணியில் லோரி மூலம் அகற்றக்கூடிய 33 குப்பைப் தோம்புகள் மற்றும் இரண்டு மண்வாரி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம 78.38 டன் குப்பைகளை அகற்றினோம். சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் அதே வேளையில் சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருப்போம் என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ-கிளின் செயலி வாயிலாக புகார் அளிக்கும்படியும் வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :