ECONOMYSELANGOR

எம்பிஎஸ்ஜே தாசிக் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள SS19 மேடான் செலேராவை மேம்படுத்தும்

சுபாங் ஜெயா, செப்டம்பர் 26: சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) அதன் நிர்வாகப் பகுதியில் மேலும் இரண்டு மேடான் செலேராவை எதிர்காலத்தில் மேம்படுத்தும்.

SS19, சுபாங் ஜெயா மற்றும் தாசிக் ஸ்ரீ செர்டாங், செர்டாங்கில் இரண்டு மேடான் செலேரா உள்ளன என்று அதன் டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

SS19 இல் வர்த்தகர்களுக்கான தற்காலிக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேடான் செலேராவை மீண்டும் கட்டுவதற்கான  ஒப்பந்த புள்ளி அக்டோபரில்  கோரப்பட உள்ளதாகவும் ஜோஹாரி கூறினார்.

“இந்த மேடான் செலேரா பழமையான மற்றும் பாழடைந்த வணிகப் பகுதி. இந்த அனைத்து உணவு விடுதிகளையும் கட்டுவதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்தோம், அதற்கு 18 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தாசிக் ஸ்ரீ செர்டாங் மேடான் செலேராவை பொறுத்தவரை, அடுத்த ஆண்டு முதல் அதன் கட்டுமானம் மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகளைத் கோருவோம்,” என்று அவர் கூறினார்.

பூச்சோங் பெர்மாய் மேடான் செலேராவை நேற்று திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

SS13 இல் ஒரு புதிய நடமாடும் உணவு வணிகத்திற்கான தளத்தை அவரது தரப்பு உருவாக்குகிறது என்று ஜோஹாரி மேலும் கூறினார்.

“இந்த பகுதி புதியது மற்றும் எம்பிஎஸ்ஜே நடமாடும் உணவு வணிக ஆப்ரேட்டர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த வாகனத் தளம் இந்த டிசம்பரில் வணிக நடவடிக்கைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

“இந்தப் பகுதி இருப்பதன் மூலம் உணவு வாகன விற்பனையாளர்களுக்கு மற்றொரு வணிக வாய்ப்பை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :