ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோலா லங்காட் கடற்கரையில் நீர் மட்டம் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறது எம்பிகேஎல்

ஷா ஆலம், செப்டம்பர் 27: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சிலின் (எம்பிகேஎல்) நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆறு கடலோரப் பகுதிகளின் கடல் நீர் மட்டம் வரம்புக்குள், பாதுகாப்பாக உள்ளது.

இன்று காலை 6.19 மணியளவில் நீர் மட்டம் 5.3 மீட்டர் வரையில் இருந்ததைக் கண்காணித்ததாக பேஸ்புக் ஊடாக எம்பிகேஎல் தெரிவித்தது.

எம்பிகேஎல் அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து துரித நடவடிக்கை குழு (விரைவு) மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

“கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டபோது, வருகையாளர்கள் யாரும் கடற்கரைப் பகுதிகளில் இல்லை. நீர் மட்டம் இன்னும் வரம்புக்குள் உள்ளது, நிலைமை பாதுகாப்பாக உள்ளது,” என்றார்.

உயர்ந்த அலை காரணமாக கெலானாங் கடற்கரை, மோரிப் பாரு கடற்கரை, மோரிப் கடற்கரை மற்றும் பத்து லாவுட் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு எம்பிகேஎல் நேற்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.


Pengarang :