ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அடைபட்ட குழாய்கள் குறித்து தகவல் தருவீர்-  பொது மக்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 27- அடுத்த மாதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் பகுதிகளில் உள்ள அடைபட்ட வடிகால்கள் குறித்து  புகார் தரும்படி மாநில மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துப்புரவு நோக்கங்களுக்காக கே.டி.இ.பி.டபள்யு.எம். கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் 019-274 2824 என்ற வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக புகார் செய்யலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பாதிக்கப்பட்ட இடத்தைக் காட்டும் 10 வினாடிகளுக்கும் குறைவான நேரம் கொண்ட வீடியோ பதிவை அனுப்பலாம் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளபடி இந்த நவம்பரில் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராகும் பொருட்டு உங்கள் பகுதியில் அடைபட்ட வடிகால்கள் குறித்து புகார் தர கே.டி.இ.பி.டபள்யு.எம். நிறுவனம் பொதுமக்களின் உதவியை நாடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு ஏதுவாக  கால்வாய்களில் குப்பைகள் குவியாமல் இருப்பதையும் நீரோட்டம் சீராக இருப்பதையும் உறுதி செய்யும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இவை தவிர, வடிகால்களில் குழாய் இணைப்புகளை ஏற்படுத்துவதையும் கால்வாய்கள் அருகே குப்பைகளைப் போடுவதையும் தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :