ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கடல் பெருக்கு காரணமாக கிள்ளானில் மூன்று பகுதிகளில் வெள்ள கண்காணிப்பு

ஷா ஆலம், செப் 27: கிள்ளான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடல் நீர் மட்டத்தை கண்காணித்ததில் இன்று காலை 7.30 மணி நிலவரப்படி நீர்மட்டம் பாதுகாப்பாகவும் கட்டுக்குள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

குன்சி ஆயர் ஸ்ரீ மூடா, பெங்காலன் போர்ட் கிள்ளான் மற்றும் தஞ்சோங் ஹராப்பான் ஆகிய இடங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (எம்பிகே) தெரிவித்துள்ளது.

“மதகு அல்லது அணை இன்னும் நல்ல நிலையில் உள்ளது என்பதை ரோந்து முடிவுகளும் கண்டறிந்துள்ளன.

“கண்காணிப்பின் போது, எந்த குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்க வில்லை என்பதும், குன்சி ஆயர் மற்றும் அருகில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் இயல்பான மற்றும் பாதுகாப்பான மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

கடந்த வாரம், வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கு நிகழ்வை சமாளிக்க வாகன சொத்துகளுக்கான உபகரணங்களை தயார் செய்வதாக எம்பிகே கூறியது.

பிக்கப் டிரக்குகள், ஜெட்டர் லாரிகள், டேங்கர்கள் மற்றும் சிறிய படகுகள் உள்பட 20 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் வெள்ளத்திற்கு பயன்படுத்த தயாராக உள்ளன என்று அதன் தலைவரான நோரைனி ரோஸ்லான் கூறினார்.

முன்னறிவிப்பின் அடிப்படையில், உயர் அலை இன்று 5.3 மீட்டர் உயரமும், நாளை காலை 7.53 மணிக்கு 5.4 மீட்டர் உயரமும், வியாழன் காலை 6.42 மணிக்கு இடையே 5.3 மீட்டர் உயரமும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :