ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வடிகால் சீரமைப்புக்கு ஒதுக்கீடு பெறும் முயற்சியில் மேரு உறுப்பினர் தீவிரம்

ஷா ஆலம், அக் 3- இந்த மாதம் ஏற்படக்கூடிய பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க வடிகால் அமைப்பை பராமரிக்கவும் சுத்தம் செய்யவும் மேரு சட்டமன்ற உறுப்பினர்  நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

அக்டோபர் மத்தியில் கடல் பெருக்கு  நிகழ்வு ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதால் கால்வாய் சீரமைப்பு தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தொகுதி உறுப்பினர் முகமது ஃபக்ருல்ராசி முகமது மொக்தார் கூறினார்.

வடிகால்களை ஏன் பராமரிக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில், கால்வாய் பராமரிப்பு சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக  உள்ளது. எனினும், சொந்த ஒதுக்கீட்டை பயன்படுத்துவதற்காக நாங்கள் நில மற்றும் மாவட்ட அலுவலகத்துடன் விவாதித்து வருகிறோம் என்றார் அவர்.

இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் சமரசம் செய்ய முடியாது, அதனால்தான் எந்த வேலையும் செய்வதற்கு முன் அவர்களிடமிருந்து (அரசாங்கம்) அனுமதி பெற வேண்டும் என்று அவர் சிலாங்கூர்கினியிடம் அவர் கூறினார்.

இதற்கிடையில், பேரிடர்கள் காரணமாக  ஏற்படக்கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அவர் மேரு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இம்மாத மத்தியில் கடல் பெருக்கு அதிகாலை 5.00 மணிக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் உறங்கும் நேரத்தில்  திடீரென்று வெள்ளம் வந்தால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்றார் அவர்.

சிலாங்கூர் தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும், செப்டம்பர் மத்தியிலிருந்து டிசம்பர் வரை 100 முதல் 400 மி.மீ வரை மழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தின் 62 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு எதிர்பார்க்கிறது.


Pengarang :