ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ள அபாயம் உள்ள 50 இடங்களில் கால்வாய் துப்புரவுப் பணி தீவிரம்

ஷா ஆலம், அக் 4– தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய 50 இடங்களை சிலாங்கூரில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் (கே.டி.இ.பி.டபள்யு.எம்.) நிறுவனம் அடையாம் கண்டுள்ளது.

அந்த வெள்ள அபாயம் உள்ள இடங்களில் 14 கிள்ளான் மாவட்டத்தில் உள்ள வேளையில் உலு லங்காட் மற்றும் சிப்பாங்கில் தலா 9 இடங்களும் கோம்பாக்கில் 8 இடங்களும் கோல சிலாங்கூரில் 4 இடங்களும் பெட்டாலிங்கில் 5 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

ஆறுகளுக்கு அருகிலும் தாழ்வானப் பகுதிகளிலும் அமைந்துள்ள காரணத்தால் இப்பகுதிகள் அபாயம் மிகுந்தவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் கருத்தில் கொண்டு கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம் விரைவான மற்றும் சீரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு வடிகால்களில் நீரோட்டம் சீராக இருப்பதை உறுதி செய்ய குப்பைகளை அகற்றுவது மற்றும் கால்வாய்களை துப்புரவு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மினி குப்பை சேகரிப்பு மையங்களை நிறுவுவது தொடர்பில் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களுடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் குப்பைகளை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்வதற்கு ஏதுவாக குப்பை சேகரிப்பை மையங்களை அடையாளம் கண்டுள்ளோம். இதன் மூலம் கடந்தாண்டு வெள்ளத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைக் காட்டிலும் இம்முறை சீராக வகையில் குப்பைகளை அகற்ற இயலும் என்றார் அவர்.


Pengarang :