ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கேடிஇபி கழிவு மேலாண்மை வெள்ளத்தை எதிர்கொள்ள 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தயார்படுத்தி உள்ளது 

ஷா ஆலம், 4 அக்: கேடிஇபி கழிவு மேலாண்மை 1,800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இந்த ஆண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதிர்கொள்ள தயாராக உள்ளது.

இந்தத் தொகையில் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களும் அடங்குவர் என்று அதன் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் தெரிவித்தார்.

“எங்களிடம் 500 ரோரோ லாரிகள் உள்ளன, அவை வெள்ளம் ஏற்பட்டால் அணி திரட்டப்படும், மேலும் ஒவ்வொரு வாகனத்தின் ஓட்டுநர் உட்பட மூன்று துப்புரவு தொழிலாளர்கள் என 1,500 பேர் உள்ளனர்.

மேலும், எங்களிடம் 300 முதல் 350 பேர் வரை பணிபுரிகின்றனர். வெள்ளம் ஏற்பட்டால் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு செல்ல தயாராக உள்ளனர்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னதாக, கேடிஇபி கழிவு மேலாண்மை அதன் 1,100 இயந்திர உபகரணங்கள் ஒரு பெரிய வெள்ளத்தின் சாத்தியத்தை எதிர்கொள்ளத் திரட்டப்படும் எனத் தெரிவித்தார்.

காம்பாக்டர் லாரி உட்பட அனைத்து இயந்திரங்களும் வெள்ளம் சூழ்ந்த ஒவ்வொரு பகுதியிலும், குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடா, செக்சன் 25, ஷா ஆலம் ஆகியவற்றில் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) சிலாங்கூரில் உள்ள கிள்ளான், பெட்டாலிங், கோம்பாக், உலு லங்காட், சிப்பாங், கோலா லங்காட், சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய எட்டு மாவட்டங்களை அடிக்கடி வெள்ளப்பெருக்கு இடங்களாகக் கண்டறிந்துள்ளது.


Pengarang :