ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காப்பிட் ரூமா பாஞ்சாங் பகுதியில் வெள்ளம்- 16 குடும்பங்கள் வெளியேற்றம்

சிபு, அக் 10- நேற்று பெய்த அடை மழை காரணமாக ஜோன் ரம்பா, ரூமா பாஞ்சாங் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் காப்பிட் நகரிலுள்ள சமூக மேம்பாடு மற்றும் நகரமய அமைச்சின் தங்கும் விடுதியில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ஆறு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று மூத்த குடிமக்கள், இரு சிறார்கள் மற்றும் ஒரு மாற்றுத் திறனாளியை உள்ளடக்கிய அந்த குடியிருப்பாளரகள் நேற்று மாலை முதல் அந்த மையத்தில் தங்கியுள்ளதாக மலேசிய பொது தற்காப்பு படையின் காப்பிட் மாவட்ட பிரிவு கூறியது.

ஜாலான் பிலேத்தேவில் உள்ள அந்த தற்காலிக நிவாரண மையத்திற்கு நேற்று மாலை 6.45 மணியளவில் அவர்கள் வந்து வந்து சேர்ந்தனர். வெள்ளம் பாதித்த இடத்திலிருந்து அவர்களை மீட்கும் பணி பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதோடு அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்பட்டன என்று அது தெரிவித்தது.

அடிக்கடி பெய்யும் கனமழை காரணமாக காப்பிட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதால் அம்மாவட்ட மக்கள் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும்படி மாவட்ட அதிகாரி பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :