ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தை எதிர்கொள்ள, தீயணைப்பு துறை ஆபத்தான 52 இடங்களை தொடர்ந்து கண்காணிப்பு. 

ஷா ஆலம், அக் 13: வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அடுத்து, ஜனவரி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், வெள்ள அபாய மிக்க 52 பகுதிகளில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தொடர் ரோந்து பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

குறிப்பாக அடை மழை பெய்யும் போதும், ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேளையிலும்,  உச்ச விழிப்பு நிலையில் சம்பந்தப்பட்ட துறை இருக்கும் என அதன் அதிகாரி நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.

“செயல்திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான, பயிற்சிகள், தாமான் ஸ்ரீ மூடா போன்ற வலுவான நீரோட்டங்கள் உள்ள பகுதிகளில், படகுகளை  செலுத்துவது போன்ற பயிற்சிகள் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது.

சிலாங்கூர் மலேசியா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ்

“எங்களிடம் 72 படகுகள் உள்ளன, சபாக் பெர்ணம் போன்ற ஆபத்தற்ற பகுதிகளில் இருந்து, பெட்டாலிங் போன்ற ஆபத்தான பகுதிகளில் , படகு போன்ற சாதனங்களை பயன் படுத்துவோம்,” என்றார்.

இங்குள்ள செக்சன் 15 ல் உள்ள தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஜேபிபிஎம் சிலாங்கூர் தயார் நிலையின் விளக்கமளிப்பில் இவ்வாறு கூறினார். அந்நிகழ்வை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  நிறைவு செய்தார்.

இதற்கிடையில், மாநில தீயணைப்பு படை எப்போதும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு உறுப்பினர் விடுமுறையும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்கும் செயல்முறைக்கு இப்பொழுது முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நோரஸாம் கூறினார்.


Pengarang :