ECONOMYMEDIA STATEMENTSELANGOR

15வது பொதுத் தேர்தல்- புறநகர் தொகுதிகளில் சிலாங்கூர் பக்கத்தான் கவனம் செலுத்தும்

சபாக் பெர்ணம், அக் 16- பதினைந்தாவது  பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி 
செய்ய சிலாங்கூர் ஹராப்பான் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தும்.

சுங்கை புசார் மற்றும் சபாக் பெர்ணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல்  இயந்திரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இப்பகுதியில் ஹராப்பான் தேர்தல் இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு  வந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை  மற்றும் ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 ​​அவர்கள் தொடர்ந்து கடுமையாகப் பணியாற்றுவார்கள் என்பதோடு  வெற்றியை அடைவதற்கான  உத்வேகத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் இன்று டேவான் ஸ்ரீ பெர்ணமில்  நேற்று கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் உள்ள ஹராப்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.

நாங்கள்  நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை தொடக்கத்திலேயே  முடித்து விட்டோம். ஆனால் ஓரிரு சட்டமன்ற இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

மாநில சட்டமன்ற தொகுதி பங்கீடு குறித்து கருத்து தெரிவித்த அமிருடின், நாடாளுமன்றத்துடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெறாது இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று  என்று அவர் சொன்னார்.

சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பில் முடிவு செய்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Pengarang :