ALAM SEKITAR & CUACAECONOMY

லங்காவி தீவில் வெள்ளம்- லீ டுவர் டி லங்காவி சைக்கிளோட்ட பந்தயத் தடத்தில் மாற்றம்

லங்காவி, அக் 17– லங்காவி தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக குவா முதல் கூனோங் ராயா வரையிலான லீ டுவர் டி லங்காவி ஏழாம் கட்ட பந்தயத் தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 90.8 கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்கிய இந்த பந்தயத் தடத்திற்கு பதிலாக எட்டாவது லுப் லங்காவி தடத்தை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.

சைக்கிளோட்டிகள், குழுவினர் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூனோங் ராயா மலையுச்சியை உள்ளடக்கிய ஏழாம் கட்ட வழித்தடத்தை ரத்து செய்ய பொதுப்பணி இலாகா, லங்காவி மாவட்ட மன்றம், லங்காவி, நில அலுவலகம் ஆகியவை முடிவு செய்துள்ளன.

குனோங் ராயாவின் நான்கு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த வழித்தடம் சைக்கிளோட்டப் போட்டிக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

கடுமையான மழை காரணமாக சுற்றுலாத் தீவான லங்காவியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய பொது தற்காப்புத் துறை நேற்று கூறியிருந்தது.


Pengarang :