ECONOMYMEDIA STATEMENT

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டில் அரசு நிறுவன துறைத் தலைவர் கைது – எம்ஏசிசி

கோலாலம்பூர், அக்டோபர் 18 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 2017 ஆம் ஆண்டு வாகனம் வாங்கும் நோக்கத்திற்காக ஒரு நிறுவனத்தை நியமித்தது தொடர்பாக, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில், ‘டத்தோ’ என்ற பட்டத்தைக் கொண்ட அரசாங்க நிறுவனத்துறை தலைவரை கைது செய்தது.

புத்ரா ஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் நேற்று (அக்டோபர் 17) இரவு 8 மணிக்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது 40 வயது நபர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு உதவுவதற்காக அவர் அக்டோபர் 21 வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

எம்ஏசிசி ஆதாரத்தின் படி, நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் பயன்பாட்டிற்காக RM290,000க்கும் அதிகமான மதிப்புள்ள நான்கு வாகனங்களை கொள்முதல் செய்வது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு தொடர்பானது என்கிறது.

இதற்கிடையில், எம்ஏசிசி மூத்த புலனாய்வு இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹாஷிமைத் தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17 (ஏ) மற்றும் 23 இன் கீழ் விசாரிக்கப் படுவதாகவும் கூறினார்.


Pengarang :