ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு மருத்துவர் உட்பட மருத்துவக் குழுவைச் சேர்ந்த 5 பேர் லேசான காயங்களுடன் மீட்கப் பட்டனர்.

கேமரன் ஹைலேண்ட்ஸ், அக்டோபர் 26 – இன்று பிற்பகல் இங்கு பிரிஞ்சாங் அருகே உள்ள வனப்பகுதியில் அவசரமாக தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,  ஒரு மருத்துவர் உட்பட மருத்துவக் குழுவைச் சேர்ந்த 5 பேர் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்கிறது  ஆக கடைசியாக கிடைத்த  செய்தி.

பகாங் மற்றும் தீயணைப்பு மீட்பு துறை (ஜேபிபிஎம்) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘கேப்ட் பெட்ரோ’ என்று மட்டுமே அழைக்கப்படும் தனியார் ஹெலிகாப்டரின் பைலட் காயமின்றி தப்பினார்.

இதற்கிடையில், ஜேபிபிஎம் செய்தித் தொடர்பாளர், தேடுதல் மற்றும் மீட்பு (SAR)யைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் பிற்பகல் 3.51 மணி அளவில் பாதுகாப்பாகக் கண்டு பிடிக்கப்பட்டனர்   என்றார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார், அவர்களில் ஒருவருக்கு கால் உடைந்துள்ளது.

முன்னதாக,  மலேசியாவின் சிவில் ஏவியேஷன் துறை (CAAM) கேமரன் ஹைலேண்ட்ஸில் 9M-SSW என்ற பதிவு எண் கொண்ட ஏர்பஸ் AS 355 F2 ஹெலிகாப்டர் 1.03 மணிக்கு விபத்துக்குள்ளான தகவல் கிடைத்தை  அதன்  தலைமை செயல் அதிகாரி டத்தோ செஸ்டர் வூ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதில்  ஒரு பைலட் மற்றும் ஐந்து பயணிகளுடன் ஹெலிகாப்டர் கிளாந்தனில் உள்ள கம்போங் கவினில் இருந்து பேராக்கின் தஞ்சோங் ரம்புத்தானுக்கு மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர்  லயாங் லயாங் ஏரோஸ்பேஸ் எஸ்டிஎன் பிஎச்டி மூலம் இயக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை போக்குவரத்து அமைச்சின் விமான விபத்து புலனாய்வு பணியகம் கையாளும் என்றும் வூ மேலும் கூறினார்.


Pengarang :