ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அன்று ஓர் அணியில் இருக்கும் போது  கட்டித் தழுவியவர்கள் இன்று கம்யூனிஸ்ட்டா?  டத்தோ ஸ்ரீ அன்வார் கேள்வி.

கோல சிலாங்கூர் அக் 27;- பாஸ் கட்சியும் ஜ.செ.காவும்   2018 ஆன் ஆண்டு வரையில் ஓர் அணியில் பயணித்தது . அன்று லிம் கிட் சியாங்கை ஆரக் கட்டித் தழுவினார் டத்தோ ஸ்ரீ ஹஜி ஹடி அவாங். இன்று ஜ.செ.காவை கம்யூனிஸ்ட்டு என்று விஷம பிரச்சாரம் செய்கிறார் பாஸ் தலைவர். அவரது இரட்டை வேடத்தை நாட்டு மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்று கோல சிலாங்கூரில் ” இலட்சியங்களுடன் நம்பிக்கை பயணம் என்ற தொடரில் ” கோலகலமாக கோல சிலாங்கூரில் நடைபெற்றது. இந்த தொடரில்  மூன்றாவதாக  சிலாங்கூர் மாநிலத்தில்  நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான மக்கள் கூட்டம் கலந்து கொண்டது. இந்நிகழ்வுக்கு தலைமையேற்று  டத்தோ ஸ்ரீ அன்வார்  உரையாற்றினார்.

கோம்பாக் தொகுதியில் சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய தளபதி எதிர்த்து களம் காண்பார் என்று பலத்த கரவொலி க்கு இடையே அறிவித்தார். கோம்பாக் தொகுதியில் பி.கே.ஆர் கட்சி சின்னத்தில் டத்தோ அஸ்மின் அலி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஷெரட்டன் நகர்வின் வழி நம்பிக்கை கூட்டணிக்கு துரோகம் செய்த துரோகியை நமது தளபதி களம் கண்டு மகத்தான வெற்றி பெறுவார் என்று அவர் மேலும் கூறினார்.

ஐ- செர்ட் மலாய் காரர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மன்னர்களுக்கு எதிரானது என்று பாஸ் குற்றம் சாட்டியது. அன்று யார் ஐ-செட்டை கொண்டு வந்தது? சைபுடின் தான் கொண்டு வந்தார். அவரோடு தான் இன்று பாஸ் பயணிக்கிறது. நாடாளுமன்றத்தில் வேதமூர்த்தி தாக்கல் செய்தார். அன்று கடுமையாக குற்றம் சாட்டிய பாஸ் கட்சியும் அம்னோவும் இன்று சைப்புடினுடன் தான் இருக்கிறது என்று பாஸ் கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார்.

தே.மு. ஆட்சிக்கும் பி.என் ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பி.என் ஆட்சியில் பி.கெ.பி. என்ற நடமாட்ட கட்டுப்பாடுகள்  மிக நீண்ட காலம் அமல் படுத்தியது,   உலகிலேயே மிகப்பெரிய  70 பேர் கொண்ட அமைச்சரவை.

தே.மு. ஆட்சியில் இஸ்மாயில் சப்ரி பிரதமராக இருந்த போது பிரதமருக்கு ஆலோசகர்கள், சிறப்பு தூதர்கள் என்று மக்கள் பணம் விரயமானது. குறைந்தது ரி.ம. 50,000.00 ஒவ்வொரு தூதர்களுக்கு வீண் செலவு செய்தது.

தேசிய முன்னணியின் மகத்தான சாதனை 1 எம்.டி.பி. ஊழல் தொடர் கதை தான். பெல்க்ரா, எல்.சி.எஸ் என்று ஊழல் எல்லாத்துறைகளிலும் பெருகியது.

இஸ்லாமிய பண்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டனர். இனவாத அரசியலை அவர்கள் நடத்துகின்றனர். அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். தவறான வழியில் சொத்து சேர்க்கின்றனர். இவை யாவும் இஸ்லாமிய பண்புகளுக்கு எதிரானது என்று அவர் விவரித்தார்..

நாட்டின் கல்வித் தரம் முன்னேற்றம் அடையவில்லை.நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் நமது கல்வி தரமும் இன்னும் மேம்பாடு அடையவில்லை.

பல்லின மக்களை கொண்ட நம் நாட்டில் இனவாத அரசியல் ஆரோக்கியமற்றது. என்னை பொறுத்த வரையில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையானவர்கள், அவர்களில் வறுமை கோட்டில் உள்ளவர்களின் உயர்வுக்கு பாடுபடுவேன். அதே போல் தான் சீனர்கள், இந்தியர்கள், கடசான், டூசுன், இபான் என்று அனைவரின் வறுமையை துடைத்தொழிக்க பாடுபடுவேன் என்று தெளிவுபடுத்தினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியில் உள்ள எந்தக் கட்சி போட்டி போட்டாலும் பிளவுபடாத ஆதரவை கொடுக்க வேண்டும். நமது அனைத்து வேட்பாளர்களும் வெற்றி  பெறுவதை உறுதி செய்ய வேண்டுகிறேன்.

நம்பிக்கை கூட்டணியின் சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை உறுதி செய்யுங்கள். கோல சிலாங்கூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள 22 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்


Pengarang :