ECONOMYMEDIA STATEMENTNATIONAL

15 வது பொதுத் தேர்தலில் போராட்டம், அர்ப்பணிப்பின் அடையாளமாக, அமிருடின் ஷாரி கோம்பாக், அன்வார் தம்பூனில் போட்டி

அம்பாங்  அக் 28;-  நாட்டில் மிகவும் பாதுகாப்பான பல நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் வேளையில், பக்காத்தான் கனவு மட்டுமின்றி தன் கனவினை புதைக்கும்  விதமான ஒரு விபரீத அறிவிப்பு என பல அரசியல் பார்வையாளர்கள் வர்ணித்திருப்பது டத்தோ ஸ்ரீ அன்வார் பேராக் தம்பூன் நாடாளுமன்ற  தொகுதியில்   போட்டியிடுவதை.

டத்தோ ஸ்ரீ அன்வார்  அவர்  பல்கலைக்கழக காலங்களிலிருந்து மக்களின்  மேம்பாட்டுக்காக, மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும்  ஒரு போராளி, அதில் அவர் எப்படிப்பட்ட  விபரீதத்தையும் சந்திக்கும் மன ஆற்றல் கொண்டவர் என்பதை நாடே அறியும்.. சுதந்திரத்திற்கு பின்  இப்படிப்பட்ட ஆற்றலை,  அர்ப்பணிப்பை கொண்ட ஒரு இளைஞரை கண்டு அம்னோ அன்று  அஞ்சியது,  அவரின் சமய  ஈடுபாடு களை பயன்படுத்தி பாஸ் அரவணைக்க துடித்தது. அம்னோவிற்கு  அன்றே,  அது கலத்தை ஏற்படுத்தியது.

அதை கண்டு அஞ்சிய அம்னோ  என்ன விலை கொடுத்தும்  அம்னோவில்  அன்வாரை  உறுப்பினராக்கும்  மஹா சதி வலையை பின்னியது.  இதனை  நாட்டின்  மிக முக்கிய ” இந்திய- மலாய் இஸ்லாமிய”   சூத்திரதாரி   மகாதீர் கையில் எடுத்துக்கொண்டார்.  அதனால்  80ம் 90ம்  ஆண்டுகளில் நாட்டில் ஏற்படவிருந்த மாற்றத்தை  ஒழித்துக் கட்டிவிட  பின்னிய சதி வலையில் இருந்து அன்வாரை   காப்பாற்றியது  நாட்டின்  உண்மையான  போராட்ட வாதிகள்.

அதனால்  இன்று  நாடு எதிர் நோக்கம்  மிகப்பெரிய  சவாலை  எதிர்கொள்ள  டத்தோ ஸ்ரீ  அன்வாரை  இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின்  பிரதமர்  வேட்பாளராக அது  அறிவித்தது.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கும், மலேசிய மக்களுக்கும், குறிப்பாக  இளைஞர்களுக்கு  டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் வழங்கிய  மாபெரும்  அதிர்ச்சி, டத்தோ ஸ்ரீ அன்வார் 15வது பொதுத் தேர்தலில், ஒரு மத்திய  அமைச்சரும், முன்னாள்  மந்திரி புசாருமாகிய அமாட்  பைசால் அசுமோவை  அவரின்  தம்பூன்  தொகுதியில் எதிர்த்து  போட்டியிடுவதாக அறிவித்தார்.

தலைவர் எவ்வழியோ,  தொண்டர்களும்  அவ்வழியே என்பதற்கு ஏற்ப  சிலாங்கூர் மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரியும்   வணிக  பொருளாதார துறையின்  அமைச்சர்  அஸ்மின்  அலியை எதிர்த்து கோம்பாக் தொகுதியில்  போட்டியிடுகிறார்.

”நாம் எப்போதும் தலைவர்களை,  அவர்களின் தியாகங்கள் மற்றும் மக்கள் மீதும்,  நாட்டின் மீதும்  அவர்களுக்கு உள்ள ஈடுபாடுகள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.   பட்டம் பதவியை மட்டும் அவர்கள்  நோக்கமாக கொண்டிருந்தால்,  இது  போன்ற அக்கினி பரிட்சைக்கு  அவர்கள் முன் வந்திருக்க மாட்டார்கள் என்பதை நாடு அறியும்.

துரதிஷ்டவசமாக மலேசியாவில் தியாகம் , அர்ப்பணிப்பு  பண்புள்ள   தலைவர்கள்  அதிகமில்லை ஆனால்  இருப்பவர்களையும்  நாம் அடையாளப்படுத்தி அவர்களின் போராட்டங்களுக்கு  சரியான  ஆதரவு வழங்க தவறியதால், இன்று நாட்டை  ஆளும்  அரசாங்கத்தினால்  13 காசே மதிப்புள்ள  ஒரு  முட்டை பிரச்சனைக்கு  கூட 6 மாதங்களாக   தீர்வு காண முடியவில்லை.

அப்படிப்பட்ட  பாரிசான் மற்றும்  பெரிக்காத்தான்   அரசாங்கத்திடம், அல்லது கூட்டத்திடமா  நம் பிள்ளைகளின்  எதிர்காலத்தை ஒப்படைப்பதா  என்பதே நாட்டு மக்கள் மனதில் எழுந்துள்ள மிக முக்கிய  கேள்வி?

ஆனால் முட்டையை விட  அதிக முக்கியமான  விவகாரங்கள் அதிகம்  உண்டு என்பதை கவனத்தில்  கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக சேவை செய்ய ஒரு இளம் படையை  பக்காத்தான் ஹராப்பான்  முன்நிறுத்தி உள்ளது, அவர்களுக்கு  வாக்களித்து  இந்த நாட்டை காக்கும் மிக முக்கிய பொறுப்பு  இப்பொழுது  மக்கள் கைகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.


Pengarang :