ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பாரிசான் ஆட்சியில் தோன்றிய புத்ரா பெர்டானா நிலப்பிரச்னைக்கு பக்கத்தான் அரசு தீர்வு

சிப்பாங், அக் 30- பூச்சோங், புத்ரா பெர்டானா பகுதியைச் சேர்ந்த 9,000 குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வந்த நிலப் பிரச்னைக்கு மாநில அரசு தீர்வு கண்டுள்ளது. இக்குடியிருப்பாளர்கள் அனைவரும் அடுத்த மாதம் நில உரிமை மாற்று அங்கீகாரக் கடிதத்தைப் பெறவுள்ளனர்.

இந்த அங்கீகாரம் தொடர்பில் நில அலுவலகத்தின் செயலறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுமார் 9,000 குடியிருப்பாளர்களை உட்படுத்திய புத்ரா பெர்டானா நிலப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை இந்த நிகழ்வில் அறிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என நம்புகிறேன். சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருடன் கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த பிரச்னை தோன்றியது. அதற்கு தீர்வு காணும் வழிவகைகளை நாம் ஆராய்ந்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான இதன் தொடர்பான செயலறிக்கையை நில அலுவலகம் அனுப்ப வேண்டும். இந்த அங்கீகாரத்திற்கு சிறிது கால அவகாசம் பிடிக்கும் என்பதால் குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் இதற்கான தீர்வு எட்டப்படும் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் புத்ரா பள்ளிவாசலில் பள்ளிவாசல் செயலாக்க திட்டத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :